காணாமல் போனவர்கள் புலிகளால் பலாத்காரமாக இழுத்துச் செல்லப்பட்டனர்! கோட்டாபய தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்காக அரசாங்கம் உதவிகளை வழங்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் இதனை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கரை நேற்று சந்தித்தபோது கோட்டாபய இதனைக் குறிப்பிட்டார்.

காணாமல் போனோரில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர். பலர் விடுதலைப்புலிகளால் பலாத்காரமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

எனவே இதனை காணாமல் போனோரின் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவசியமான விசாரணைகளின் பின்னர் காணாமல் போனோர் என்று கூறப்படுபவர்களுக்கு மரணச்சான்றிதழ்கள வழங்க ஏற்பாடுகளை செய்யமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அந்த குடும்பங்களுக்கு உரிய உதவிகளை வழங்கமுடியும் என்றும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.

எனினும் அரசியல் லாபம் கருதி தமிழ் அரசியல்வாதிகள் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் என்றும் கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.