இந்திய பாதுகாப்பு ஆலோசகரால் ஜனாதிபதி கோட்டாபயவிடம் 50 மில்லியன் ரூபா கையளிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டொவால் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 50 மில்லியன் ரூபாவை இராணுவத்தினருக்காக வழங்கியுள்ளார்.

இந்த உதவி இலங்கையின் புலனாய்வு சேவையை மேம்படுத்த பயன்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் கடல் பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களுக்காகவும் இந்த நிதியுதவி பயன்படுத்தவுள்ளதாக டொவல் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வந்துள்ள டொவால் ஜனாதிபதி கோட்டாபயவுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார் என்று அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.