தற்போதைய அரசாங்கம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு கப்பம் வழங்காது – விமல்

Report Print Kamel Kamel in அரசியல்

தற்போதைய அரசாங்கம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு கப்பம் வழங்காது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தைப் போன்று தற்போதைய அரசாங்கம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு கப்பம் வழங்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்த போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்ச வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளுக்கு நேற்றைய தினமும், இன்றைய தினம் விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...