ரணிலை விட்டு விலகிச்செல்லும் முக்கிய உறுப்பினர்கள்? சஜித்துடன் புதிய கூட்டணி

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளி கட்சிகளாக இருந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணியை ஏற்படுத்தி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளனர்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“புதிய கூட்டணியின் கீழ் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முடிவு, நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அத்துடன், முன்னாள் அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் ராஜித சேனாரட்ன உள்ளிட்ட, தலைமைத்துவ மாற்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், புதிய கூட்டணியின், பெயர் மற்றும் பொறுப்பாளர்கள் பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களாக இருந்துகொண்டு புதிய கூட்டணியுடன் இணைந்து செல்வோம்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார கூறியுள்ளார்.

Latest Offers

loading...