அரசாங்கத்தில் இணைய முயற்சிக்கும் றிசார்ட் பதியூதீன்

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரபல அரசியல் பாத்திரமாக இருந்து வந்த இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசார்ட் பதியூதீன் தற்போதைய அரசாங்கத்தில் இணைய முயற்சித்து வருவதாக உயர்மட்ட அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் பலரை சந்தித்துள்ள அவர், பசில் ராஜபக்ச இலங்கை திரும்பியதும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருவதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விஜயமாக வெளிநாடு சென்றுள்ள பசில் ராஜபக்ச தற்போது அமெரிக்காவில் இருக்கின்றார்.

முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக அன்றைய எதிர்க்கட்சியான கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தி வந்தது.

தமது அரசாங்கத்தில் றிசார்ட் பதியூதீன் போன்ற அடிப்படைவாதிகளை இணைத்துக் கொள்ள போவதில்லை எனவும் அவர்கள் கூறி வந்தனர்.

எது எப்படி இருந்த போதிலும் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை றிசார்ட் பதியூதீன் மறுத்திருந்தார்.

தன்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.