எம்.சீ.சீ. உடன்படிக்கை கைச்சாத்திடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கூறுகிறார் நாமல் கருணாரத்ன

Report Print Steephen Steephen in அரசியல்

வரலாற்றில் முதல் முறையாக காய்கறி கிடங்குகளை கொள்ளையிடும் இடத்திற்கு நாடு சென்றுள்ளதாக அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் காய்கறி கிடங்கிற்கு பாதுகாப்பு வழங்க முடியாத அரசாங்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், தற்போது இப்படி விசர் விளையாட்டுக்களில் ஈடுபடும் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தால் எப்படியான நிலைமை ஏற்படும் என்பதையே எங்களால் கூற முடியும்.

எம்.சீ.சீ. உடன்படிக்கையை கைச்சாத்திடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. காணிகளை விற்பனை செய்ய தயாராகி வருகின்றனர்.

பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் அதனை மக்களால் தாங்க முடியவில்லை. இந்த நிலைமைகளை மறக்கடிக்கும் ஆயுதமாக அரசாங்கம் குரல் பதிவுகளை பயன்படுத்தி வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers

loading...