மாற்று வழியை தேட நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எச்சரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது எவரது காலுக்கும் கீழ் விழுந்து கிடக்கும் கட்சியல்ல என அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தொடர்ந்தும் மனங்களை புண்படுத்தினால், மாற்று வழியை தேட வேண்டியேற்படும் என எச்சரித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பினரால் தமது கட்சியினர் தொடர்ந்து புண்படுத்தப்படுவது தொடர்பாக கண்டியில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், எமக்கு சாதாரண உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், ராஜாங்க அமைச்சு என்ற பதவிகள் முக்கியமல்ல, கட்சித் தலைவர்கள் ஏற்படுத்தி கொண்ட இணக்கப்பாடே முக்கியமானது என நான் நினைக்கின்றேன்.

நாங்கள் யாருடைய கால்களுக்கு கீழ் விழுந்து கிடக்கவில்லை. எந்த சவாலையும் சந்திக்க நாங்கள் தயார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதனை விட பாரதூரமான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த விமர்சனங்கள் எங்களுக்கு பழக்கமில்லாத விமர்சனங்கள் அல்ல.

எந்த சவாலையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். கூட்டணியின் கீழ் பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம். கூட்டணியை பாதுகாக்க நாங்கள் விரும்புகிறோம்.

ஆனால், நாங்கள் புறந்தள்ளப்பட்டால், அதற்கு நாங்கள் மாற்று வழியை தேடிச் செல்ல நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers