ஐ.தே.முன்னணியின் தலைமைத்துவம் சஜித்திற்கு

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்க முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமை என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடன் சம்பந்தப்பட்ட விடயமல்ல. கட்சிக்குள் எந்த நெருக்கடியும் இல்லை.

கட்சியின் தலைமைத்துவம் என்பதும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைத்துவம் என்பதும் வெவ்வேறானவை.

ஐக்கிய தேசியக் கட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் பிளவுப்பட இடமளிக்க போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் எனவும் மான்னப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...