ரணில் - கரு மற்றும் சஜித் இடையில் நாளை முக்கிய பேச்சுவார்த்தை

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தமான விசேட பேச்சுவார்த்தை நாளைய தினம் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் இந்த பேச்சுவார்த்தை நாளை காலை கொழும்பில் நடைபெறவுள்ளது.

கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் நடைபெற்றது.

மூன்று தலைவர்கள் கூடிய இறுதி தீர்மானத்தை எடுப்பதாக இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதற்கு அமைய இந்த கூட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Latest Offers