எதிர்வரும் பொதுத்தேர்தல் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் அறிவிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்திலேயே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸவின் அணி கட்சியில் இருந்து பிரிந்து செல்லும் என்ற கருத்து நிலவி வரும் சந்தர்ப்பத்திலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தலைவர் பிரச்சினை தொடர்ந்தும் நீடிப்பதால் இடைக்கால தீர்வாக தலைமைத்துவ சபை ஒன்றை அமைத்து அதில் ரணில் விக்ரமசிங்க, கரு ஜெயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரை உள்ளடக்குவது என்ற விடயம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் கரு ஜெயசூரியவை கட்சியின் தேசிய தலைவராக அறிவிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சில தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...