அமைச்சர் பதவியை ஏற்க மறுத்தார் டி.ஏ.ராஜபக்ச! சமல் ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

டி.ஏ.ராஜபக்சவுக்கு அன்றைய பிரதமர் பண்டாரநாயக்க அமைச்சு பதவியை வழங்கியபோது, அவர் அதனை ஏற்க மறுத்ததுடன் அதனை கோரும் வேறு ஒருவருக்கு வழங்குமாறு கூறியதாக டி.ஏ.ராஜபக்சவின் மூத்த புதல்வரும், அமைச்சருமான சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போதுள்ள கலாச்சாரம் வித்தியாசமானது எனவும், நாடாளுமன்றத்திற்கு தெரிவானதும் அமைச்சர் பதவியை கோருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக நெருக்கடிகள் ஏற்படுகிறது. பதவிகள் இல்லாமலும் மக்களுக்கு பல சேவைகளை செய்ய முடியும் எனவும் சமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய மகாவலி மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நான் 1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானேன்.

1999ஆம் ஆண்டே எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அந்த அமைச்சு பதவியுடன் செய்ய முடிந்த அனைத்தையும் செய்தேன்.

எனினும் அன்றில் இருந்து துறை சார்ந்த சேவைகளை மாத்திரமே செய்ய முடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...