அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை மீறி வருகிறது: பிமல் ரத்நாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக அவற்றை மீறி வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

சிங்கள வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளில் உர மானியத்தை வழங்குவதாக கூறியதே பிரதான வாக்குறுதி. இந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

மக்களுக்கு மானிய விலையில் அத்தியவசியப் பொருட்களை வழங்குவதாக வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாத காரணத்தினால், அரிசி, காய்கறி உட்பட அத்தியவசியப் பொருட்களின் விலைகள் வான் அளவுக்கு உயர்ந்துள்ளன.

அத்துடன் நிபுணத்துவக் குழு மூலமாக அரச திணைக்கங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு பிரதானிகளை நியமிப்பதாக ஆரம்பத்தில் கூறிய போதிலும் தகுதி இல்லாதவர்கள், சட்டவிரோத செயல்களில் பங்கெடுத்தவர்கள், பிரபல அரசியல் குடும்பங்களின் உறவினர்கள் அந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், அரசாங்கம் எதிர்பார்க்கும் சௌபாக்கிய நோக்கம் நிறைவேறுமா என்பது கேள்விக்குறி எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...