வவுனியாவில் ரெலோவின் மத்தியகுழு கலந்துரையாடல்

Report Print Theesan in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மத்தியகுழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

வவுனியா அலுவலகத்தில் இன்று காலை இக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

ரெலோவின் அடுத்த கட்ட நகர்வு, சமகால அரசியல் நிலவரங்கள், வரவிருக்கும் தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக் கலந்துரையாடலில் பேசப்பட்டுள்ளதாக‌ அறிய‌ முடிகின்றது.

இக் கலந்துரையாடலில் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...