உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பும் மெரில் குணரட்ன

Report Print Ajith Ajith in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜெயவர்த்தன விசாரணை செய்யப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் (2000ஆம் ஆண்டுக் காலப்பகுதி) செயலர்களில் ஒருவரான மெரில் குணரட்ன இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

15 வருடங்களாக புலனாய்வு சேவையில் இருந்த நிலந்தவுக்கு எவ்வாறு இந்த தாக்குதல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்காமல் இருந்தன என்று மெரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் இந்திய புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

எனவே இது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் மெரில் குணரட்ன கோரியுள்ளார்.

Latest Offers