விஷமாக இருந்த எரிபொருள் விலை சூத்திரம் தற்போது அமிர்தமாக மாறியுள்ளது

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வரும் இரகசிய சூழ்ச்சி காரணமாக தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பணிகளை செய்ய அவர்கள் தவறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த - ரணில் இடையிலான உடன்பாடு காரணமாகவே ரணில் கட்சியை விட்டு செல்லாமல் இருக்கின்றார்.

2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் திருடர்களுடன் உடன்பாடு செய்து, அவர்களை பாதுகாத்து தாலாட்டி வந்தனர்.

கடந்த அரசாங்கத்தில் விஷமாக இருந்த எரிபொருள் விலை சூத்திரம் தற்போதைய அரசாங்கத்திற்கு அமிர்தமாகி உள்ளது.

எரிபொருள் சூத்திரம் சுவையாக இருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது கூறுகிறார். அரசாங்கம் முன்வைக்கும் அனைத்து யோசனைகளும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் எனக் கூறுகிறது.

ஏன் மார்ச் மாதம் இரண்டாம் திகதி இரவு நாடாளுமன்றம் கலைக்கப்படும். நாங்கள் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டோம், கூறியவற்றை செய்ய நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை எமக்கு தாருங்கள் என கூறுவார்கள்.

நாடாளுமன்றத்தை கூட்டாமல், நாட்டின் அரச நிறுவனங்களுக்கு பிரதானிகளை நியமிக்காமல் நாட்டை எப்படி நிர்வாகம் செய்ய முடியும்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் யோசனைகளை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வாருங்கள். நாங்கள் கைகளை உயர்த்தி அதனை நிறைவேற்றுவோம் எனவும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.