16 அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு

Report Print Steephen Steephen in அரசியல்

மண் மற்றும் மணல் ஆகியவற்றை ஏற்றிச் செல்ல வழங்கப்பட்டு வந்த அனுமதிப்பத்திர முறைமையை அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் நிறுத்தியமைக்கு எதிராக சுற்றாடல் நியாய கேந்திர நிலையம் என்ற அமைப்பு, அமைச்சரவை அந்தஸ்துள்ள 16 அமைச்சர்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு நேற்று முன்தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.

1992 இலக்கம் 33 சுரங்கம் மற்றும் கனிய வள சட்டத்தின்படி, வழங்கப்பட்டு வந்த மண் மற்றும் மணல் ஏற்றிச் செல்வதற்காக அனுமதிப்பத்திர முறைமையை கடந்த டிசம்பர் 4ஆம் திகதி நீக்கியமைக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த அனுமதிப்பத்திர முறைமை நீக்கப்பட்டுள்ளதால், மணல் ஏற்றிச் செல்லுதல் மற்றும் அகழ்வுகள் அதிகரித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளது.

வழக்கின் பிரதிவாதிகளாக அமைச்சரவை அந்தஸ்துள்ள 16 அமைச்சர்கள், புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம், பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.