சிங்காசனம் இருக்கின்றது அரசாங்கம் இல்லை - மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்து, தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்க வேண்டாம் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

எதிர்வரும் பொதுத் தேர்தல் மிகவும் முக்கியமான தீர்மானகரமான தேர்தல். செய்யக் கூடியவைகளையே யோசனைகளாக முன்வைக்க வேண்டும். மக்களால் நிராகரிக்கப்பட்டு, தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வந்தவர்களுக்கு வேட்புமனுவை வழங்கக் கூடாது.

இப்படியானவர்களை மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பக் கூடாது என்று தீர்மானித்துள்ளனர். இதற்கு பதிலாக தேசப்பற்றுள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும்.

சில நேரம் இரண்டு அல்லது மூன்று கட்டங்களின் கீழ் இலங்கையின் நாடாளுமன்றத்தை சீர்த்திருந்த நேரிடும். படித்த, நாட்டை நேசிக்கும் புதியவர்கள் 6 - முதல் 70 பேரையாவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும். அப்படி நடந்தால், கனவு நனவாகும்.

அரசரை உருவாக்கினோம் வேலை செய்ய. வேலை செய்ய தேவையான சிங்காசனம் இருக்கின்றது, ஆனால் அரசாங்கம் இல்லை. இதனால், அந்த சிங்காசனத்திற்கு அரசாங்கம் ஒன்றை அடுத்த இரண்டு, மூன்று மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மெதகொட அபயதிஸ்ஸ தேரர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவிக்கு கொண்டு வர முக்கிய பங்காற்றிய பிக்குமார்களில் பிரதானமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.