வேட்பாளர் பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு சுதந்திரக் கட்சிக்கு கிடைக்க வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து அமைத்துள்ள புதிய கூட்டணியின் வேட்பாளர் பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைக்க வேண்டும் என அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் அனைவரும் இணக்கப்பாட்டுக்கு வந்தோம். இரண்டு கட்சிகளும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

வேட்பாளர் பட்டியலில் மூன்றில் ஒரு பங்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்க வேண்டும் என்பது இணக்கப்பாடு.

இதனடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வந்தோம். இதற்கு அமையவே நாங்கள் செயற்பட எதிர்பார்த்துள்ளோம் என வீரகுமார குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers