சஜித் மகிழ்ச்சியாக செயற்பட்டு வருகின்றதாக தெரிவிக்கிறார் அஜித் பீ. பெரேரா

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பதவியில் மிக சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக தெரிவாகி மூன்று வாரங்களே கடந்துள்ளன.

அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எதிர்க்கட்சியில் உள்ள சகல கட்சிகளுடனும் கலந்துரையாடி அரசியல் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி கட்சிகளின் கீழ் மட்ட தலைவர்களை சந்தித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

அத்துடன் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கடமையை நிறைவேற்றி சஜித் பிரேமதாச முன்நோக்கி செல்வார் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers