வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல

Report Print Steephen Steephen in அரசியல்

முதலீட்டு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் வரையறுக்கப்பட்ட அச்சக கூட்டுத் தாபனத்தின் முன்னாள் தலைவர் பண்டார ஹிந்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு தொடர்ந்த வழக்கில் இருந்து அவர்களை விடுதலை செய்து கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்ச ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் ஆணைக்குழுவின் அனுமதியின்றி வழக்கை தாக்கல் செய்துள்ளதாக முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை நிராகரித்து மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலஞ்ச ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட தொலைபேசி கட்டணமான 2 லட்சத்து 30 ஆயிரத்து 984 ரூபாயை வரையறுக்கப்பட்ட அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர், கூட்டுத்தாபனத்தின் பணத்தில் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.