பிணைமுறி தடயவியல் சட்ட கணக்காய்வு அறிக்கை தொடர்பான சபாநாயகரின் தீர்மானம் இந்த வாரம்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக நடத்தப்பட்ட தடயவியல் சட்ட கணக்காய்வு அறிக்கை தொடர்பான சபாநாயகரின் தீர்மானம் இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.

தடயவியல் சட்ட கணக்காய்வு அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானத்தை எடுப்பார் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தடயவில் சட்ட கணக்காய்வு அறிக்கை தற்போது நாடாளுமன்றத்திற்கு கிடைத்துள்ளதுடன் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அந்த அறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதை சபாநாயகர் அண்மையில் இடைநிறுத்தி வைத்தார்.

இதனடிப்படையில் இது சம்பந்தமாக இறுதி தீர்மானத்தை எடுக்கும் முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

நாளைய தினம் நாடாளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட அறிக்கையை சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்குமாறு கோரி விசேட சிறப்புரிமை கோரிக்கையை விடுக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.

அதேவேளை பிணைமுறி சம்பவம் தொடர்பான தடயவில் கண்காய்வு அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க கூறியுள்ளார்.

Latest Offers

loading...