அரசாங்கத்தில் இணைகிறாரா றிசார்ட் பதியூதீன்? அவரே வெளிப்படுத்தியுள்ள விடயம்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தில் இணைந்து கொள்ள போவதாக சில சமூக ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரம் முற்றிலும் அடிப்படையற்றது என இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றிசார்ட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள போவதாக வெளியாகி இருந்த செய்திகள் தொடர்பாக கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

இவ்வாறான விடயம் சம்பந்தமாக அரசாங்கத்தை சேர்ந்த எவருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமது கட்சி ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers