நீர்வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சின் வன்னி மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு செயலாளர் நியமனம்

Report Print Theesan in அரசியல்

நீர்வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளராக வி.சங்கரலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள அமைச்சில் வைத்து நேற்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கான நியமனக் கடிதத்தினை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வழங்கி வைத்துள்ளார்.

வி.சங்கரலிங்கம் முன்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை சபையின் வடக்கிற்கான நிபுணராகவும் தற்போது ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியின் வன்னி மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers