தொகுதி அமைப்பாளர்களை சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர்

Report Print Steephen Steephen in அரசியல்

விசேட சந்திப்புககாக ஐக்கிய தேசிய முன்னணியின் சகல தொகுதி அமைப்பாளர்களையும் நாளைய தினம் கொழும்புக்கு அழைக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.

தொகுதி அமைப்பாளர்களின் இந்த சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நாளை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக ஒருங்கிணைப்பு பணிகள், தேர்தல் கட்டமைப்பை முன்னெடுக்கும் விதம் தொடர்பாக இதன்போது தொகுதி அமைப்பாளர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட உள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

இதனிடையே ஐக்கிய தேசிய முன்னணியின் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் எதிர்வரும் 26ஆம் திகதி கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.