இலங்கை தமிழர்களின் நாடு! சிங்களவர்கள் வந்தேறிகள்! விக்னேஸ்வரன் காட்டம்

Report Print Sujitha Sri in அரசியல்

சிங்களவர்கள் என கூறப்படுபவர்களும் ஆதித் திராவிட குடிகளில் இருந்து வந்தவர்களே என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற 6ஆம் ஆண்டு உலகத்தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

அண்மைய DNA பரீட்சைகள் சிங்களவர்களை திராவிடர்கள் என்றே கூறுகின்றன. சிங்கள மொழி கிறிஸ்துவிற்கு முன் ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில் தான் வழக்கிற்கு வந்தது.

அதற்கு முன்னர் சிங்கள மொழி பேசுபவர்கள் எங்கள் நாட்டில் இருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க சிங்கள அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் கடந்த நூறு வருடங்களில் பிழையான ஒரு கருத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

புத்தர் காலத்திற்கு முன்னதாகவே தமிழரின் நாகரீகம் இலங்கையில் பரவியிருந்ததற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

இலங்கையானது சிங்கள பௌத்த மக்களின் நாடு என்றும் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வந்தேறு குடிகள் என்றும் அவர்களுக்கென எந்த உரிமைகளும் தரத் தேவையில்லை என்ற கருத்தை இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் அப்பாவி சிங்கள மக்கள் மனதில் சிங்கள அரசியல்வாதிகளும் புத்தி ஜீவிகளும் விதைத்து வந்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.