ரணிலிற்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஆராயுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் சம்பந்தமாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு முன்னாள் பிரதமர் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கையை கவனத்தில் கொண்டே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

அதேவேளை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்திருந்த பாதுகாப்பு சம்பந்தமான சகல கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...