அரசியலமைப்பு பேரவை 23 ஆம் திகதி கூடுகிறது!

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு பேரவை அதன் தலைவரான சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் எதிர்வரும் 23ம் திகதி நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள செயலகத்தில் கூடவுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச் சட்டத்தின் கீழ் தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு ஆகிய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவைக்கே வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவையின் தலைவராக சபாநாயகர் பதவி வகிப்பதுடன் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட 10 பேர் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.