சீனாவிற்கு ஈடாக இலங்கையில் கால் பதிக்கும் இந்தியா!

Report Print Ajith Ajith in அரசியல்

சீனாவுக்கு ஈடாக இலங்கையுடன் இந்தியா நெருங்கிய உறவை பலப்படுத்தியுள்ளது. அல் ஜஸீரா செய்தி சேவை இதனை தெரிவித்துள்ளது.

அண்மையில் இலங்கைக்கு வந்த இந்திய பாதுகாப்பு செயலாளர் அஜித் டோவல் ஜனாதிபதி கோட்டாபயவுடன் நடத்திய சந்திப்பின்போது இரண்டு நாடுகளும் இணைந்து கடல் ஆய்வு மத்திய நிலையம் ஒன்றை அமைக்கும் யோசனையை முன்வைத்துள்ளார்.

இதன் நோக்கங்கள் இதுவரை வெளியாவில்லை.

ஏற்கனவே இந்தியாவும், மேலைத்தேய நாடுகளும் முதலீடுகளை மேற்கொள்ளாது போனால் இலங்கை சீனாவின் நிதி உதவியை நாடுவதை தவிர்க்க முடியாது என கோட்டபாய கடந்த நவம்பரில் எச்சரித்ததாக அல் ஜஸீரா சுட்டிக்காட்டியுள்ளது.

Latest Offers