இலங்கை அகதிகளுக்கும் குடியுரிமை? நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Report Print Murali Murali in அரசியல்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“1964ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் 2,838 பாகிஸ்தானியர்கள், 914 ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் 172 பங்களாதேஷைச் சேர்ந்த அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அதில் இஸ்லாமியர்களும் அடங்குகின்றனர். அண்டை நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதற்காக அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட மாட்டாது என்று அர்த்தம் கிடையாது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் இலங்கை தமிழர்கள் 95 ஆயிரம் பேர் முகாமில் அகதிகளாக இருக்கின்றனர். அவர்களுக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்யப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

.

Latest Offers