மன்னாரில் தமிழ் மொழிக்கு வழங்கப்பட்ட இடத்தை மாற்றியமைத்த அமைச்சர் விமல்!

Report Print Ashik in அரசியல்

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்திலுள்ள பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் பெயர்ப்பலகையில் இதற்கு முன்னர் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் அது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்சவின் உத்தரவின் கீழ் இது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் விமல் வீரவன்ச இரண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.

அந்த விஜயத்தின்போது செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் பனந்தும்பு உற்பத்தி நிலையம் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் தமிழில் முதலிலும் இரண்டாவதாக சிங்களத்திலும் மூன்றாவதாக ஆங்கிலத்திலும் விபரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

அதனை அவதானித்த அமைச்சர் விமல், அந்த பெயர் பலகையை மாற்றி, முதலில் சிங்களத்தில் விபரங்களை எழுதுமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையிலேயே குறித்த பெயரப் பலகை இன்றைய முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டு அமைச்சர விமல் வீரவன்ச தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார்.

Latest Offers