ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவுள்ள கரு ஜெயசூரிய

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக பிரச்சினையை சபாநாயகர் கரு ஜெயசூரிய விரைவில் தீர்ப்பார் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கரு ஜெயசூரிய இன்னும் ஒரு வார காலத்துக்குள் கட்சியில் நிலவும் தலைவர் பிரச்சினைக்கு தீர்வை காண்பார்.

இதன்போது அவருடைய தீர்வை அர்ப்பணிப்புடன் ஏற்றுக்கொள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தயார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை 2023 வரை தாம் கட்சியின் தலைவராக இருக்கப்பவதாக ரணில் விக்ரமசிங்க கூறியதாக வெளியான தகவலை முஜிபுர் ரஹ்மான் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers