முதியவர்களின் அன்பு மழையில் நனைந்தார் சாள்ஸ் நிர்மலநாதன்

Report Print Dias Dias in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் முதியவர்களுக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு - விசுவமடு அதிசய விநாயகர் அமுத சுரபி மண்டபத்தில் நேற்றைய தினம் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

முதியவர்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள், முதியோர்களின் தற்போதைய தேவைகள் தொடர்பாகவும் சாள்ஸ் நிர்மலநாதன் கேட்டறிந்து கொண்டார்.

முதியவர்களே இந்த நாட்டின் முத்துக்கள். அவர்களை கண் கலங்காமல் பாதுகாப்பது எம் அனைவரின் கடமை. உங்களின் இந்த நிகழவில் நான் கலந்து கொண்டது மிகப் பெரும் பாக்கியமாக கருதுகின்றேன். உங்கள் அன்பிற்கு எனது நன்றிகள். நீங்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எதிர்வரும் காலங்களில் பெற்றுதருவேன் என உறுதிபடக் கூறுகின்றேன் என சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

பின்பு அனைத்து முதியவர்களும் சாள்ஸ் நிர்மலநாதனை வாழ்த்தியதுடன், எமக்கு எதுவென்றாலும் உடனடியாக களத்தில் நிற்பவனுக்கே எமது வாக்குகள் என்றும் இந்த விசுவமடு சமூகம் உங்களை மறவாது எனவும் முதியவர்கள் கூறியுள்ளனர்.

இதன்போது அவர் சாள்ஸ் நிர்மலநாதன் முதியவர்களின் அன்பு மழையில் நனைந்தார்.

இந் நிகழ்வில் சமுர்த்தி உதியோகத்தார்கள், கிரம மட்ட பொது அமைப்புக்கள், முதியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers

loading...