எப்போது பதவியை ராஜினாமா செய்வார் சுமந்திரன்? தமிழர்களை ஏமாற்ற முடியாதென கூறுகிறார் சுகாஸ்

Report Print Sumi in அரசியல்

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்திற்குள் தமிழர்களுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும், அது தவறுமாயின் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் எப்போது தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என்பதை கேட்க விரும்புகிறேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும், சட்டத்தரணியுமான சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கூகையில்,

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திற்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை பெற்று கொடுப்பதாகவும், அது தவறும் பட்சத்தில் தனது பதவியை துறப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார்.

இன்று ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியும் முடிவுற்றுள்ளது. எனவே எப்போது அவர் தனது பதவியினை இராஜினாமா செய்யவுள்ளார் என கேட்க விரும்புகிறேன்.

தற்போது வேத காலம் வந்துள்ளமையால் சுமந்திரன் அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து தமிழ் மக்களிடம் பாசாங்கு செய்வதை நாங்கள் பார்க்க கூடியதாக உள்ளது.

என்ற போதும் இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...