நாடாளுமன்றத்தில் ஹிருணிக்கா உட்பட பலரிடம் மன்னிப்பு கேட்ட ரஞ்சன் ராமநாயக்க

Report Print Vethu Vethu in அரசியல்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரஞ்சன்,

எனது வீட்டில் இருந்த தொலைபேசி உரையாடல்கள் காரணமாக சிலரின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மனதளவில் பிரச்சினைக்குள்ளான ஹிருணிக்கா பிரேமசந்திர உட்பட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

மக்களின் பணத்தை அழிக்கும் நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு தேவையான சாட்சியங்களை குரல் பதிவுகளாக சிடி தட்டுக்களில் வீட்டில் வைத்திருந்தேன்.

ஆரம்பித்த போராட்டத்தை வெற்றி பெறும் வரை கைவிட வேண்டாம் என ஊழலுக்கு எதிராக என்னுடன் உரையாடிய, தகவல் வழங்கிய நீதிமன்ற அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உட்பட அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

தன்னை இலக்கு வைத்து, குரல் பதிவுகளை வெளியிடும் நடவடிக்கையை ஒரு ஊடகம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு விசேட ஆணைக்குழு ஒன்று நியமிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் குறிப்பிட்டார்.

அவ்வாறு விசேட ஆணைக்குழு நியமிக்க முடிந்தால் நியமித்துக் கொள்ளுங்கள். அந்த ஆணைக்குழுவுக்கு தான் கோப்புகளை கொண்டு வருவேன் என ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers