முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கட்சிக்கு உள்ளேயே அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
ரணில் விக்ரமசிங்கவிற்கு கட்சிக்கு உள்ளேயே அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளமை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ரணிலின் பாதுகாப்பு குறித்து தற்போதைய அரசாங்கதிற்கு பொறுப்பு உண்டு.
ரணிலுக்கு பிரதான அச்சுறுத்தல் சிறிகொத்தா உள்ளேயே காணப்படுகின்றது. முன்னாள் பிரதமர் என்பதனால் அதற்காக செயற்படுவது அரசாங்கத்தின் கடமையாகும்.
சொந்தக் கட்சி என்றாலும் ரணிலுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து கவலைப்பட வேண்டும். ரணிலுக்கு அச்சுறுத்தல் உண்டு என கூறப்படுகின்றது என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.