காணாமல் போனவர்களை புலிகள் அழைத்துச் சென்றனரா? கோட்டாபயவின் மீது ஸ்ரீதரன் சீற்றம்

Report Print Ajith Ajith in அரசியல்

போரின்போது காணாமல் போனவர்கள் இறந்து விட்டதாக ஜனாதிபதி கூறிய தகவலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் இன்று நாடாளுமன்றில் இந்த எதிர்ப்பை வெளியிட்டார்.

காணாமல் போனோரில் பெரும்பாலானோர் படையினரிடம் சரண் அடைந்தவர்களாவர். இதற்கு சாட்சிகள் உள்ளன. எனவே அவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் நீதி விசாரணை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

காணாமல் போனோர் இறந்து விட்டனர் அல்லது விடுதலை புலிகளால் பலாத்காரமாக அழைத்து செல்லப்பட்டிருக்கலாம் என கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன் அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் கோட்டபாய ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதியிடம் அண்மையில் கூறி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Latest Offers

loading...