பல ரகசியங்களை வெளிநாட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளேன்! மிரட்டும் ரஞ்சன் ராமநாயக்க: பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

முடிந்தால் ஆணைக்குழு அமைத்து விசாரியுங்கள், மஹிந்த ராஜபக்சவுடன் பேசிய பல குரல் பதிவுகளும் என்னிடம் உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்றிருந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய குரல் பதிவுகளை வன்தட்டு மூலம் வெளிநாட்டில் பாதுகாத்து வைத்துள்ளேன்.

லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டமை, ரிசானா நபீக் சவுதி அரேபியாவில் தூக்கிலிடப்பட்டமை, பிணை முறி மோசடி என பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பல அரசியல் வாதிகள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பான மேலதிக விபரங்களை தாங்கி வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,

Latest Offers