சம்பந்தன் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Vethu Vethu in அரசியல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்கள் குறைக்கப்பட மாட்டாது என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய கடந்த அரசாங்கம் அவருக்கு வழங்கிய வீட்டை மீண்டும் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய தொடர்ந்தும் அனைத்து வரப்பிரசாதங்களும் வழங்கப்படும்.

சம்பந்தன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“நான் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகினேன். அதற்காக 2017ஆம் ஆண்டு வீடு ஒன்று வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் வாடகைக்கு வீடு ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கூறினார்கள். எனினும் எனக்கு தேவையற்ற செலவு ஏற்படும் என்பதனால் அதனை நான் விரும்பவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக 20 வருடங்களாக செயற்பட்ட எனக்கு, மாதிவல வீட்டில் 60 - 70 படிக்கட்டுகள் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது எனது வயது 80 ஆகும்.

தற்போதைய சபாநாயகரும் முன்னாள் பிரதமரும் தங்கள் விருப்பத்தற்கமைய எனக்கு பாதுகாப்பு மற்றும் ஊழியர்கள் வழங்கினாார்கள். எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் எனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ காரில் 2082 கிலோமீற்றர்கள் மாத்திரமே பயணித்தேன்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகியவுடன் நான் அந்த வாகனத்தை உடனடியாக எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்தேன். இதற்கு பின்னரும் 80 படி ஏறுமாறு கூற வேண்டாம். தற்போது எனது வயது 80ற்கும் அதிகம்” என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

“தங்களுக்கு நாங்கள் கௌரவம் வழங்குவோம். தற்போது வழங்கப்பட்டுள்ள எந்தவொரு அனுகூலத்தையும் நீக்க மாட்டோம். உங்களுக்கு அவசியமான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவிட்டுள்ளனர்” என தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Latest Offers