தபால்மூல வாக்களிப்பு சட்டத்தில் ஏற்பட்டுள்ள புதிய திருத்தம்!

Report Print Kanmani in அரசியல்
58Shares

தபால்மூல வாக்களிப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டத்துறைப் பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.

தனியார் பிரிவுகளில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பிரகாரம், ஒரு வாரத்திற்கு முன்னர் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் வாக்களிப்பு நிலையங்களை ஸ்தாபிப்பது புதிய சட்ட திருத்தத்தில் உள்ளடக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.