ரஞ்சனின் இறுவட்டுக்கள் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவில்லை: ஆனந்த குமாரஸ்ரீ

Report Print Ajith Ajith in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்கள் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவில்லை என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீ இன்று மன்றில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த செவ்வாய்கிழமை மன்றில் உரையாற்றிய ரஞ்சன் ராமநாயக்க இறுவட்டுக்களை மன்றில் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பிலேயே பிரதி சபாநாயகர் இன்று தமது அறிவித்தலை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த சில தினங்களாக பல்வேறு குரல் பதிவுகளை வெளியிட்டு பல அரசியல்வாதிகள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய விடயங்களை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.