முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் சகோதரர் கைது - விளக்க மறியலில் வைக்க உத்தரவு

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் சகோதரர் ரிப்கான் பதியூதின் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணி மோசடி தொடர்பான குற்றசாட்டிற்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலை மன்னார் பிரதேசத்திலுள்ள 40 ஏக்கர் அளவிலான காணி இரண்டிற்கு போலி உறுதி பத்தரம் தயாரித்தமை தொடர்பில் ரிப்கான் பதியூதினுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருதானை பிரதேசத்தை சேர்ந்தவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியுதீனின் சகோதரர் றிப்கான் பதியுதீனை பெப்ரவரி 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அவர் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.