கூட்டமைப்பின் மீது வடக்கு மக்கள் வெறுப்புடன் உள்ளனர்!

Report Print Sumi in அரசியல்

வடக்கு மக்கள் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது வெறுப்புடன் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கில் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்கள் பலதரப்பட்டவர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவர்கள் ஒரு தலைமையின் கீழ் செயல்பட முடியாதவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள்? என்று நான் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.

தமிழ் கட்சிகளின் தலைவர்களை எடுத்து பார்ப்போம் ஆக இருந்தால், அது விக்னேஸ்வரன் ஆக இருக்கலாம் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆக இருக்கலாம் என எக் கட்சித் தலைவர்கள் ஆக கூட இருக்கலாம்.

தற்போது அனைவரும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வோம் என வந்தவர்கள் இன்று தங்களுடைய சுக போகங்களை அனுபவிக்கும் முகமாகவே செயற்பட்டு வருவதை நாங்கள் பார்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...