இலங்கையில் நடிகர் ஷாருக்கானை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல்! மறைக்கப்பட்ட இரகசியம் என்ன..?

Report Print Jeslin Jeslin in அரசியல்

பிரபல நடிகர் ஷாருக்கான் இலங்கைக்கு வருகை தந்த வேளையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் எனக்கு எவ்வித இரகசியங்களும் தெரியாது என நாடளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

ஷாருக்கான் இலங்கைக்கு வருகை தந்த வேளையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து எனக்கு இரகசியங்கள் தெரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறினார்.

இவ்வாறு அவர் கூறியதை அடுத்து ஷாருக்கானை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தியது நானென சிலர் நினைத்துவிட்டனர்.

முகப்புத்தகத்தில் அவ்வாறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. ஆனால் ஷாருக்கானை இலக்கு வைத்து நடத்தியதாகக் கூறப்படும் குண்டுத் தாக்குதலில் சாதாரணமாக அனைவருக்கும் என்ன தெரியுமோ, காதுகளில் என்ன கதைகள் கேட்டதோ அதுமட்டுமே எனக்கும் தெரியும். அதைத் தாண்டிய இரகசியங்கள் எதுவும் எனக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.