பொய்யான தகவல்களால் ஊடகங்களை தம்வசப்படுத்தும் அரசாங்கம்

Report Print Ajith Ajith in அரசியல்

பொயயான தகவல்களின் மூலம் ஊடகங்களை அரசாங்கம் தம்வசப்படுத்தப்போவதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக லேக் ஹவுஷின் முன்னாள் தலைவர் கிருசாந்த குரே மற்றும் செய்தியாளர் தர்சிக்கா பெஸ்டியன் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுவிஸ் தூதரக பணியாளருடன் கிருஷாந்த குரேயை தொடர்புபடுத்தி தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.

எனினும் கிருசாந்த ஒருபோதும் குறித்த தூதரக பணியாளருடன் பேசியதில்லை என்று அஜித் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு ஊடகவியலாளர் ஒருவர் தூதரகப்பணியாளருடன் பேசியிருந்தாலும் அதில் தவறேதும் இல்லை.

இந்தநிலையில் பொய்யான தகவல்களின் மூலம் ஊடகங்களை தம்சவப்படுத்திக்கொள்ள அரசாங்கம் முனைவதாக பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அரசாங்கம் ஊடகச்சுதந்திரத்தின்பால் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் விக்கிரமரட்ன குறிப்பிட்டுள்ளார்

Latest Offers

loading...