ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு விவகாரம்! நீதிபதியொருவர் கைது செய்யப்படலாம்

Report Print Ajith Ajith in அரசியல்

மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைதுசெய்யும் வகையில் நீதிமன்ற ஆணையை பெறுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பணிப்பாளரை பணித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் செயலாளர் நிசாரா ஜெயரட்ன இது தொடர்பில் தகவல் தந்துள்ளார். இதன்படி கைது ஆணை மாத்திரமன்றி தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் உரையாடல் தொடர்பில் தொழில்நுட்ப உதவகளை பெற்றுக்கொள்ளுமாறும் சட்டமா அதிபர் டப்புல்ல டி லிவேரா கொழும்பு குற்றத்தடுப்பு பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

முக்கியமான வழக்குகள் தொடர்பான தீர்ப்புக்களில் அரசியல் செல்வாக்கு இருந்தமை இந்த தொலைபேசி கலந்துரையாடல்களின் மூலம் தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தரப்பினர் தெரிவித்து வரும் நிலையிலேயே இந்த பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன.

Latest Offers

loading...