ரஞ்சன் ராமநாயக்க ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையும் அழித்துவிட்டார்!

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க போன்றவர்களை அல்லாமல் நாட்டிற்கு தகுதியானவர்களை மக்கள் தெரிவுசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்திற்கே கலங்கம் ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

நாடாளுமன்ற உறுப்பினர் - ரஞ்சன் ராமநாயக்கவின் பாத்திரத்தை குறித்து பேசுவதையே அவமதிப்பாகக் கருதுகின்றேன். அவர் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையும் அழித்துவிட்டார்.

இப்படியான நபர்களின் செயற்பாடுகளின் பிரதிபலனாகவே நாடாளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களையும் அடித்து துரத்திவிட வேண்டும் என்கிற ஆக்ரோஷத்தை மக்கள் வெளியிடுகின்றனர்.

கடந்த காலங்களில் இந்த நாட்டில் பேசத்தகாத வார்த்தைகளையே பேசினார்கள். ஆகவே எதிர்வரும் தேர்தலில் இந்த நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய நபர்கள் குறித்து மக்களே தீர்மானிப்பார்கள்.

அரசியல் கட்சிகள் தேர்தலில் யாருக்கு வேட்பு மனு வழங்க வேண்டும் என்பதையும், நாட்டிற்கும், நாடாளுமன்றத்திற்கும் தகுதியானவர்களை தெரிவுசெய்ய வேண்டும்.

பட்டதாரிகள் அவர்களைப் பார்த்து சேர் என்று அழைப்பதற்கு தகுதியுடையவர்களை மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...