மைத்திரியை கைது செய்யுமாறு கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்படவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கோரியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அவர் கைது செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வேளையில், அவரே பாதுகாப்பு படைகளின் தலைவர். அத்துடன் தீவிரவாதிகளின் தாக்குதல் இடம்பெறும் என புலனாய்வு தகவல்கள் வழங்கப்பட்ட நிலையிலேயே அவர் சிங்கப்பூருக்கு சென்றார்.

அத்துடன் இந்த விடயத்தில் ரணில் விக்ரமசிங்க உட்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் அவர் பணிப்புரை விடுத்தார் என பாலித்த ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கைது செய்வதை தடுக்கும் வகையில் மைத்திரிக்கு வரப்பிராசாதம் தற்போது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.