கோட்டாபயவின் முயற்சிகளுக்கு தடையாக மாறும் நபர்கள் யார்?

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முயற்சிகளுக்கு அவருக்கு அருகிலிருக்கும் அவரை சார்ந்த குழுவினரே இடையூறாக உள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சி விமர்சனம் வெளியிட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களாகின்ற போதிலும், இதுவரை வாழ்க்கைச் செலவைக்கூட கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் புதிய அரசாங்கம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்.

ஆனாலும் அதனை தனித்தே செய்யமுடியாது. விசேடமாக அவரது குழுவினரிடமிருந்து அந்த முயற்சிகளுக்கான ஒத்துழைப்பு கிடைப்பதாகத் தெரியவில்லை.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இது மூன்றாவது மாதத்திலிருப்பதால் புதிய அரசாங்கத்தின் வினைத்திறன், பலவீனம் என்பவற்றை மதிப்பீடு செய்யமுடியாது.

இருப்பினும் நாட்டில் வாழ்க்கைச் செலவு மற்றும் வறுமைத்தன்மையை போக்குவதற்கு அடிப்படை முயற்சிகளைக்கூட அவர் எடுக்கவில்லை என்பதே அதிகமாக தற்போது பேசப்படுகின்றது.

அதனை சுட்டிக்காட்டி இந்த அரசாங்கம் பலவீனமானது என்றும் கூறமுடியாது. அனைவரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்பார்ப்பதால் அதன் பின்னரே அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்து மதிப்பீடு செய்திட முடியும்” என்றார்.

Latest Offers