அரசாங்கத்தில் இருந்து தாம் விலக்கப்பட்ட காரணத்தை வெளிப்படுத்தும் விஜயதாச ராஜபக்ச

Report Print Ajith Ajith in அரசியல்

நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டமையை ஆட்சேபித்த காரணத்தினாலேயே ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து தாம் விலக்கப்பட்டதாக முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதித்துறையின் ஊடாக எதிர்க்கட்சியினரை தொந்தரவுக்கு உள்ளாக்கும் நிலைப்பாட்டை தாம் எதிர்த்ததாக ராஜபக்ச நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் 19ஆவது அரசியல் அமைப்பின் கீழ் அரசியல் அமைப்பு சபையும் ஒரு பக்க சார்பாகவே நடந்து கொண்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அப்போதைய காலக்கட்டத்தில் சிரேஸ்ட பொலிஸ் அதிபர் விக்ரமசிங்கவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க தாம் பரிந்துரை செய்தபோதும் பூஜித் ஜெயசுந்தர அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தமது அரசாங்கத்துக்கு சார்பான ஒருவராக இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட நியமனம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers

loading...