கொழும்பை குறி வைக்கும் பசில்!

Report Print Vethu Vethu in அரசியல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தயாராகி வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கம்பஹா மாவட்ட அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் உட்பட குழுவினர் பிரதமருடன் இணைந்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, அமோக வெற்றி பெற்றிருந்தார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொழும்பு மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்காக பசில் அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக குறிப்பிடப்படுகின்றது.

Latest Offers